இலங்கை வீடுகளில் வாள்கள் அல்லது வேறு கூரிய ஆயுதங்கள் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல...!தேடுதல்களின் போது கண்டுபிடிக்கப்படும் வாள்கள் மற்றும் ஏனைய கூரிய ஆயுதங்கள் சம்பந்தமாக தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டுபிடிக்கப்படும் வாள்கள் பழமையான மற்றும் துருப்பிடித்தவை எனவும் இராணுவ தளபதி கூறியுள்ளார். இலங்கை வீடுகளில் வாள்கள் அல்லது வேறு கூரிய ஆயுதங்கள் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல.

இலங்கை இனம் என்பது அரசன் விஜயனின் காலத்தில் இருந்து வாள்களில் சண்டையிட்ட சமூகம். எனினும் சில ஊடகங்கள் இந்த கூரிய ஆயுதங்கள் சம்பந்தமான செய்திகளை வெளியிடும் போது போர் செய்திகளை வெளியிடுவது போல மக்கள் அச்சமூட்டும் வகையில் செய்திகளை வெளியிடுகின்றன.

இதனால், கீழே விழுந்து கிடக்கும் தோட்டக்கள், 12 ரக குழல் துப்பாக்கி காட்டி செய்தி வெளியிடும் நாடகத்தை நிறுத்துங்கள். தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான ரி 56 ரக துப்பாக்கி ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது எனவும் இராணுவத்தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வீடுகளில் வாள்கள் அல்லது வேறு கூரிய ஆயுதங்கள் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல...! இலங்கை வீடுகளில் வாள்கள் அல்லது வேறு கூரிய ஆயுதங்கள் இருப்பது ஆச்சரியமான விடயமல்ல...! Reviewed by NEWS on May 10, 2019 Rating: 5