ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்வதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் இன்று (14ஆம் திகதி) காலை நாமல் குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களின் போது நாமல் குமாரவின் செயற்பாடுகள் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. 

Share The News

Post A Comment: