பயங்­க­ர­வாத தடைச்­சட்­டம், தொடர்ந்து நடைமுறையில் இருக்கட்டும் - மு.கா

நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை திருத்தம் செய்து அத­னையே நடை­மு­றைப்­ப­டுத்­து­வது ஆரோக்­கி­ய­மா­ன­தாகும். எனினும் கால தேவையை கருத்­திற்­கொண்டு தீர்­மானம் எடுப்­போ­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கூறு­கின்­றது.

புதிய பயங்­க­ர­வாத தடுப்பு சட்டம் குறித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் நிஸாம் காரி­யப்பர் இதனைத் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் இப்­போது சற்று அச்­சு­றுத்­த­லான சூழல் நில­வு­கின்­றது. இது குறித்து எமது அதி­ருப்­தி­யையும் நாம் வெளி­யிட்­டுள்ளோம். அதேபோல் இந்த சூழலில் புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் குறித்து அதிகம் கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது. எனினும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் குறித்த கலந்­து­ரை­யா­டல்கள் இதற்கு முன்னர் உரு­வா­கிய நேரங்­களில் தற்­போ­தி­ருக்கும் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தில் போதிய திருத்­தங்­களை செய்து இருக்கும் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது ஆரோக்­கி­ய­மான விட­ய­மாக இருக்கும் என்­ப­தையே நாம் நிலைப்­பா­டாகக் கொண்­டி­ருந்தோம். சில அநா­வ­சிய சரத்­துக்கள் நீக்­கப்­பட்டு மக்­களை பாதிக்­காத அதே வேளையில் தேசிய பாது­காப்­புக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்கும் சரத்­துக்­களை உள்­ள­டக்கி இருக்கும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தலாம் என்­பதே எமது நிலைப்­பா­டாக இருந்­தது.

ஏனெனில், புதி­தாகக் கொண்­டு­வர எத்­த­னிக்கும் பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்­டத்தில் மக்­களை பாதிக்கும் பல விட­யங்கள் உள்­ளன. இதனை நாம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை உள்­ளது. ஆக­வேதான் நாம் அவ்­வா­றான நிலைப்­பாட்­டினை கொண்­டி­ருந்தோம். எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இன்­னமும் இறு­தி­யான நிலைப்­பாடு ஒன்­றினை எட்­ட­வில்லை. 

இந்த வாரத்­துக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீடம் கூடும். இதில் இந்த விவ­காரம் குறித்து நாம் கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம். அதன் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது குறித்த இறுதியான நிலைப்பாட்டினை எட்டும். எவ்வாறு இருப்பினும் மக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் நாம் ஆதரிக்க மாட்டோம் என்றார்.
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டம், தொடர்ந்து நடைமுறையில் இருக்கட்டும் - மு.கா பயங்­க­ர­வாத தடைச்­சட்­டம், தொடர்ந்து நடைமுறையில் இருக்கட்டும் - மு.கா Reviewed by Ceylon Muslim on May 04, 2019 Rating: 5