முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி, பொலிசாரும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் - ஹம்பாந்தோட்டையில்..!!அம்பலாந்தோட்டை - மல்பெத்தாவ மஹா வித்தியாலயத்தில் பணியாற்றிவரும் முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி, அந்தப் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால், இன்றைய தினம் (23), ஆர்ப்பாட்டமொன்று மேற்கொண்டனர்.

ஹம்பாந்தோட்டை வலயக் கல்விப் பணிமனைக்கு முன்னால், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைக்கு வருகைதரும் மாணவர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என அனைவரும், பெற்றோர்ப் பாதுகாப்புக் குழுக்களினால், பாடசாலை வாயிலுக்கு முன்னால் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்ற போதிலும், மேற்படி ஆசிரியர், தன்னைப் பரிசோதிக்க வேண்டாமெனக் கூறுவதாகவும் சோதனை செய்ய இடமளிப்பதில்லை என்றும், பெற்றோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி, பொலிசாரும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் - ஹம்பாந்தோட்டையில்..!! முஸ்லிம் ஆசிரியரை இடமாற்றுமாறு கோரி, பொலிசாரும் சேர்ந்து ஆர்ப்பாட்டம் - ஹம்பாந்தோட்டையில்..!! Reviewed by NEWS on May 23, 2019 Rating: 5