ரமழான் தலைப்­பி­றையை தீர்­மா­னிக்கும் மாநாடு ஞாயிற்­றுக்­கி­ழமைபுனித ரமழான் மாதத்­துக்­கான தலைப்­பி­றையை தீர்­மா­னிக்கும் மாநாடு எதிர்­வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை மஃரிப் தொழு­கையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் கூட­வுள்­ளது. 

இம்­மா­நாட்டில் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள உறுப்­பி­னர்கள்,கொழும்பு மேமன் சங்க உறுப்­பி­னர்கள் மற்றும் உல­மாக்கள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

நாட்டில் எப்­பா­கத்­தி­லா­வது ரமழான் மாதத்­துக்­கான தலைப்­பிறை தென்­பட்டால் தகுந்த ஆதா­ரங்­க­ளுடன் 0112 432110, 0112 451245, 0714817380, பெக்ஸ் 0112 390783 ஆகிய இலக்­கங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளு­மாறு பிறைக்­கு­ழுவின் செயலாளர் மெளலவி அஸீஸ் (மிஸ்பாஹி) தெரிவித்தார்.
ரமழான் தலைப்­பி­றையை தீர்­மா­னிக்கும் மாநாடு ஞாயிற்­றுக்­கி­ழமை ரமழான் தலைப்­பி­றையை தீர்­மா­னிக்கும் மாநாடு ஞாயிற்­றுக்­கி­ழமை Reviewed by NEWS on May 03, 2019 Rating: 5