சஹ்ரான் குழுவின் சொத்து விபரங்கள் இதோ - அனைத்தும் முடக்கம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளின் சொத்துக்கள் தொடர்பான விபரத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இனங்கண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் 140 மில்லியன் ரூபாவிற்கு அதிகமான பணம் மற்றும் 7 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இவற்றில் ஒரு தொகை பணத்தை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதுடன் ஏனைய பணத் தொகை வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே குறித்த வங்கிக் கணக்கை முடக்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அத்துடன் அவர்களின் ஏனைய சொத்துக்கள் தொடர்பபாகவும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சொத்துக்களையும் முடக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
சஹ்ரான் குழுவின் சொத்து விபரங்கள் இதோ - அனைத்தும் முடக்கம் சஹ்ரான் குழுவின் சொத்து விபரங்கள் இதோ - அனைத்தும் முடக்கம்  Reviewed by Ceylon Muslim on May 06, 2019 Rating: 5