ரமழானின் இறுதிப்பத்தில் இக்திகாப் இருக்க ஊர் மக்களை மட்டுமே அனுமதிக்க ஹலீம் கோரிக்கை..!!

NEWS
0 minute read


ரமழானின் இறுதிப்பத்தில் இக்திகாப் இருப்பவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து தவிர்ந்து கொள்வது பற்றிய விவகாரம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுவிடயத்தில் உடனடிக் கவனம் செலுத்தியுள்ள பிரதமர் ரணில், இதுகுறித்து உடனடியாக பொலிமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இறுதிப் பத்தில் பள்ளிவாசல்களில் இக்திகாப் இருப்பவர்கள், அந்த மஹல்லா வாசிகளாக மாத்திரம் இருப்பது சிறந்ததென அமைச்சர் ஹலீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது பள்ளிவாசல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக அமைவதுடன், ஊருக்கும் பாதுகாப்பாக இருக்கும். பாதுகாப்பு பிரிவினரின் தேவையற்ற கெடுபிடிகளில் இருந்து விடுபட உதவுமெனவும் ஹலீம் மேலும் தெரிவிததுள்ளார்.
Tags