”என் புதிய கருத்தால் பதற்றம் ஏற்படலாம்” எச்சரித்த ஞானசார

Ceylon Muslim
0 minute read
இன்னும் நாளையும் விசேட ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி முக்கியமான பல தகவல்களை வெளியிட எதிர்பார்த்துள்ளோம், அந்த தகவல்களினால் சில சமயம் பதற்றமான சூழல் ஏற்படலாம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று 26- கண்டியில் நடைபெற்ற பூஜை வழிபாடொன்றின் பின்னர் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்;


குறித்த தகவல்களை மிகவும் பொறுப்புடன் வெளியிடவுள்ளோம், என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும், பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல், பொறுமையுடன், தூரநோக்குடன் செயற்படுமாறு விசேடமாக இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். பிரச்சினைகள் ஏற்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் எங்களுக்கே நஷ்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

டெய்லிசிலோன்
To Top