குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்..!முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்ட குளியாபிட்டிய பகுதிக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினரின் ஒத்தாசையுடனேயே பல இடங்களில் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தமைக்கு போதிய அளவு ஆதாரங்கள் காணப்படுகின்ற நிலையில் இவ்விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், அரசாங்கமும் சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமையும் ஹெட்டிபொல வன்முறைகளுக்கு பொலிசாரே காரணம் என ஸ்ரீலசுக செயலாளர் தயாசிறி ஜயசேகர சோனகர்.கொம்முடனான நேர்காணலின் போது குற்றஞ்சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்..! குளியாப்பிட்டிய பொலிஸ் அத்தியட்சகர் இடமாற்றம்..! Reviewed by NEWS on May 15, 2019 Rating: 5