முஸ்லிம்களின் முகமூடிக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் மட்டு. தமிழ் இளைஞர்கள்!

மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்தில் பொது இடங்கள், அரச கட்டடங்கள், பேருந்துக்கள், பஸ் தரிப்பு நிலையங்கள் அனைத்திலும் முஸ்லிம்கள் முற்றாக முகம் மூடுவதற்கு தடை விதித்து சுவர் ஒட்டிகள் வெள்ளிக்கிழமை ஒட்டப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்களால் முஸ்லிம் பெண்கள் முற்றாக முகம் மூடுவதற்கு தடை விதித்த சுவர் ஒட்டிகளை ஒட்டி காட்சிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தினால் நாட்டின் அசாதரண நிலை கருத்தி புர்கா எனும் முகமூடி அணிவதை தற்காலியமாக தவிர்த்த போதும் இவ்வாறு தமிழ் இளைஞர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதன் அவசியம் என்ன? இதற்கு பின்னால் உள்ளது இனவாத பிரச்சாரமா? 

குறித்த இவர்களின் பிரச்சாரங்களுக்கு நிதி உதவியது யார் ? இவர்களின் இந்த பிரச்சாரமானது தற்காலியமாக இலங்கை நிலை கருதியதி செய்யப்பட்டதை முழுமையாக தடை செய்யும் நோக்கமா?  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...