03வது விசாரணை: ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையனார்

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையனார்.

இன்று முற்பகல் 9.45 அளவில் அவர் விசாரணைப் பிரிவில் முன்னிலையானார் என எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பாசிக்குடா பகுதியலுள்ள விருந்தகம் ஒன்றில் வைத்து, சவுதி நாட்டவர்களை சந்தித்தமை தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

அத்துடன், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்கள் 100 பேருக்கு ஆயுதங்களைப் பெற்று கொடுத்ததாக இந்திய ஊடகமொன்றிடம் தெரிவித்த கருத்து தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

இதேநேரம், கிழக்கு மாகாணத்தில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு 720 மில்லியன் ரூபா நிதி சவுதி அரேபியாவிலிருந்து கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

நேற்று, நேற்றுமுன் தினம் பல்வேறு விசாரணை பிரிவுகளிலும் ஆஜராஜி வாக்குமூலம் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...