பாலமுனையில், இராணுவ உடையுடன் சிலர் மீது தாக்குதல் : அன்ஸில் அவசர வேண்டுகோள்


முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில் விடுத்துள்ள அவசர செய்தி..

நேற்று மாலை, பாலமுனை கடற்கரை வீதியில் பயணித்தவர்களை இராணுவ உடை தரித்த சிலர் கடுமையாக தாக்கி காயப்படுத்தியதாக அறிகிறேன்.

இத்தாக்குதல் குறித்த பிரதேசத்தில் காணப்பட்ட CCTV கமராக்களில் பதிவாகியுள்ளது.

இராணுவ உடையில் வந்தவர்கள் பயணித்து வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கமும் தெளிவாக அந்த வீடியோ பதிவில் உள்ளது.

ஆனாலும், இம்மிலேச்சத்தனமான சட்டத்திற்கு முறையான தாக்குதல் தொடர்பில், தாக்குதலுக்குள்ளான யாரும் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் செய்யப்படவில்லை.

இவ்வாறான தாக்குதல்கள் தொடர்பில் நாம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டால், இதைவிட பாரதூரமான தாக்குதல்களும் நம்மீது எதிர்காலத்தில் நடாத்தப்படலாம்.

இவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக, தாக்குதலுக்குள்ளானவர்கள் முறைப்பாடு செய்யும் பட்சத்தில் மாத்திரமே நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

தாக்குதலுக்குள்ளான சகோதரர்களே.. 
முறைப்பாடு செய்ய முன் வாருங்கள்.
இதற்காக முழு மூச்சாக செயற்பட நான் தயாராக இருக்கிறேன்.

எனது தொலைபேசி இலக்கத்திற்கு அழையுங்கள். 0772376806
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...