முஸ்லிம்களுக்கு தடை விதித்த தவிசாளருக்கு நீதிமன்றம் அழைப்பு..!

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடைவிதித்து பொதுஜன பெரமுனயின் ஆளுகையின் கீழுள்ள வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் விடுத்துள்ள உத்தரவு தொடபில் பொலிஸார் மாரவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதனையடுத்து பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஆறு பேர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இத்தகைய தடை உத்தரவுக்கான விளக்கத்தை அவர்கள் நீதிமன்றில் வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...