குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார், பதியுதீனின் அமைச்சின் செயலாளர்

Ministry Of industry and Commerce  - Secretary | Rishad Bathiudeen ministry  
பயங்கரவாத சம்பவத்துக்கு சதொச நிறுவனத்துக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர், பாராளுமன்ற தெரிவுக் குழு முன்னிலையில் இன்று(25) தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனங்களும் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு வைத்திருக்கவில்லை. அதேநேரம் சதொச நிறுவன கட்டிடத்தில் தான் அறிந்த வகையில் இரகசிய அறைகள் உள்ளதென குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது அது அவ்வாறு ஒன்றுமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

வௌிநாட்டு முதலீட்டு வேலைத்திட்டம் ஒன்றுக்கு அரசாங்கம் என்ற வகையில் தாம் அலுவலகம் ஒன்றை வழங்க வேண்டி இருந்ததாகவும், அதன்படி தானே 09 ஆம் மாடியில் அவ்வாறு அறை ஒன்றை தற்காலிகமாக வழங்கியிருந்ததாகவும் தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

அதேநேரம் சதொச நிறுவனம் சீனி என்ற பெயரில் போதைப் பொருள் கொண்டு வருவதாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களும் பொய்யானது எனவும் அவர் தெரிவுக் குழு முன்னிலையில் ஆதாரபூர்வமாக கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

டெய்லிசிலோன்
குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார், பதியுதீனின் அமைச்சின் செயலாளர் குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார், பதியுதீனின் அமைச்சின் செயலாளர் Reviewed by NEWS on June 26, 2019 Rating: 5