வென்னப்புவ பிரதேச சபை தவிசாளருடன் தொலைபேசியில் உரையாடக்கிடைத்தது....

NEWS
1 minute read
0


முஸ்லிம் வியாபாரிகள் சந்தையில் வியாபாரம் செய்வது தொடர்பாக தற்காலிக தடை விதித்து கடிதமொன்றை பொலிசுக்கு அனுப்பினீர்களா?ஆம், அனுப்பினேன். எனது பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்தேன்.

இந்த கடிதம் தொடர்பாக சபையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினீர்களா?

இல்லை, இது நான் தனிப்பட எடுத்த முடிவு.

இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையில் இவ்வாறான தடையொன்றை கொண்டுவர முடியாது என்பதை நீங்கள் அறிவீர்களா?


( கதையை மாற்ற முயற்சித்தார்) .... இல்லை. அவ்வாறான தடை ஒன்றும் விதிக்க முயலவில்லை. எனது பிரதேச மக்கள் அச்சப்படுகிறார்கள். அவர்களது பாதுகாப்பை பொலிசார் உத்தரவாதப்படுத்தினால் முஸ்லிம்கள் கடைகளை வைப்பதில் பிரச்சினை இல்லை.

அது வரை இது தற்காலிக தடை.

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபை இவ்வாறான தீர்மானம் ஒன்றை சபையில் நிறைவேற்றிய போதும் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் அதன் தவிசாளரை அழைத்து பொலிசார் அந்த தீர்மானம் தொடர்பில் எச்சரித்ததை அறிவீர்களா?

ஆம், ஆம் இது பொலிசார் எடுக்க வேண்டிய தீர்மானந்தான்.... மக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்கவே நான் இந்த கடிதத்தை அனுப்பினேன் ( பிறகு கேள்விக்கு சம்பந்தமில்லாத பலதையும் பேசினார்)

இந்த நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் இருக்கும் ஆட்சியில் வெறுப்படைந்து மஹிந்த ராஜபக்‌ஷ பக்கம் சாயத்தொடங்கியிருந்த நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் அதற்கு பாதகமாக அமையாதா?

நாம் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதனைத்தான் நாங்கள் சொல்கிறோம். நாட்டில் நடந்த சம்பவங்களை பார்த்தீர்கள்தானே இதற்கு யார் பொறுப்பு.... யார் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்று அரசு கண்டுபிடித்து சொல்ல வேண்டும். எங்களது கார்டினலும் எமக்கான நீதி கிடைக்கவில்லை என்றே சொல்கிறார்.

( நான் என்னமோ கேட்டால் அவர் என்னமோ சொல்கிறார்)

சரி இப்போது நீங்கள் முஸ்லிம் வர்த்தகர்களை பாதுகாப்பு கருதி வரவேண்டாம் என்று சொல்கின்றீர்கள். அப்படியென்றால் பொருட்களை வாங்குவதற்கு வருகின்ற முஸ்லிம்களையும் தடை செய்ய வேண்டுமே? அவர்களும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்தானே?

இந்தக்கேள்விக்கு அவர் தடுமாறிய விதத்தை எழுத்தில் வர்ணிக்க முடியாது.Speechless என்றும் சொல்லலாம்.

Mujeeb Ibrahim
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)