தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 20, 2019

கண்டி மாவட்டத்தில் எந்தவொரு தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை

கண்டி மாவட்டத்தில் தெஹீத் ஜமாஅத் பள்ளிவாசலும் பதிவு செய்யப்படவில்லை என்று தபால் மற்றும் முஸ்லிம் மத அலுவல்கள் அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார்.

வக்பு சபையின் ஊடாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளி வாசல்களை பதிவு செய்வதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் அப்துல் ஹலீம் இதனை தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் தீவிரவாதம் கிடையாதென விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சிங்கள, பௌத்த மக்களுக்கு நியாயத்தை வழங்கி ஏனைய மக்களுக்கும் நியாயத்தை நிலைநாட்டுவது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages