தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 16, 2019

வடபுலம் இந்துக்களின் பிரதேசம், புத்தர் சிலைகளை அகற்ற வேண்டும் - அத்துராலியே ரதன தேரர்

இலங்கையின் வடபுலம் இந்துக்களின் பிரதேசம் எனவும் அங்கு நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் உண்ணாவிரதம் புகழ் அத்துராலியே ரதன தேரர்.

முஸ்லிம் ஆளுனர்கள் மற்றும் ரிசாத் பதியுதீனை பதவி விலக்குவதற்கான உண்ணாவிரதத்தை முடித்த கையோடு வட-கிழக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தமிழ் - சிங்கள சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் அவசியப்படுவதாகவும் ரதன தேரர் தெரிவிக்கிறார்.

சிங்கள - தமிழ் சமூகங்கள் ஒன்றிணைந்தால் நாட்டின் சனத்தொகையில் 90வீதத்தினர் ஒன்றிணைந்திருப்பர் என ரதன தேரர் மேலும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, இதுவரை 90,000 தமிழ் பெண்கள் முஸ்லிம்களை மணந்துள்ளதாகவும் இது பற்றி தமிழ் சமூகம் ஒன்றும் பேசுவதில்லையெனவும் தெரிவிக்கின்ற அவர் முஸ்லிம்களிடமிருந்து இலங்கையின் வர்த்தக ஆளுமையைக் கைப்பற்ற சிங்கள - தமிழ் கூட்டு வர்த்தக அமைப்பும் செயற்பாடும் அவசியப்படுவதாக அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages