விசாரணைக்கு அழைத்தால் செல்லப்போவதில்லை : மைதிரி அதிரடிஇலங்கையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரிக்கப்பட்டுவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தம்மை விசாரணைக்கு அழைத்தால் அங்கு செல்லப்போவதில்லை என்று சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சற்றுமுன் ஊடகப் பிரதானிகள் மற்றும் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தற்கொலைத் தாக்குதல் குறித்த புலனாய்வுத்துறையினரின் விசாரணைகள் திருப்தியளிப்பதாக தெரிவித்துள்ள மைத்திரி, பிரதான சந்தேகிகள் அனைவரும் இறந்துவிட்டதாகவும் அவர்களுக்கு ஒத்தாசையாய் இருந்தோர் மட்டுமே கைதாகி விசாரிக்கப்பட்டுவருவதாகவும் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...