டாக்டர் ஷாபி நிரபராதி – சுகாதார அமைச்சின் விசாரணைக்குழு

குருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல்.

கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்றை தடுக்கும் எந்த சிகிச்சைகளையும் அவர் வழங்கியமைக்கான ஆதாரம் எதுவும் இல்லையென்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இவரின் சிகிச்சையையடுத்து மகப்பேறு பாதித்துள்ளதாக பல பெண்கள் முறைப்பாடு செய்திருந்தாலும் அவர்கள் எவரும் மருத்துவ பரிசோதனைக்கு முன்வர தயங்குவதாக அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

மேற்படி விசாரணை அறிக்கை சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது. அதேசமயம் எதிர்வரும் 27 ஆம் திகதி குருணாகல் நீதிமன்றத்தில் டாக்டர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது.
டாக்டர் ஷாபி நிரபராதி – சுகாதார அமைச்சின் விசாரணைக்குழு டாக்டர் ஷாபி நிரபராதி – சுகாதார அமைச்சின் விசாரணைக்குழு Reviewed by NEWS on June 15, 2019 Rating: 5