தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 15, 2019

ரணிலுடன், கடுப்பில் மைத்திரி: சமாதான தூதுவராக சஜித்..!உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திவரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டை தீர்க்கும் முயற்சியில் அமைச்சர் சஜித் பிரேமதாச முக்கிய பங்காற்றி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு பாதுகாப்பு அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாட்டை நிறுத்துமாறும் தவறின் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தப்போவதில்லையெனவும் தெரிவித்திருந்தார்.

எனினும் ஜனாதிபதியின் உத்தரவுக்கு செவிமடுக்காத அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுமென தெரிவித்ததுடன் அதன் செயற்பாட்டை தொடரந்து நடத்தியது.

இதனால் கடுப்பான ஜனாதிபதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த அமைச்சரவைக்கூட்டத்தை நடத்தாமல் நிறுத்தியிருந்தார். அமைச்சரவை கூட்டப்படாமைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டது.

இதனால் களத்தில் இறங்கிய அமைச்சர் சஜித் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசி பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளனர்.ஜனாதிபதியிடம் அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்பில் நல்லபிப்பிராயம் உள்ளமையாலேயே இது சாத்தியப்பட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன.

அரசியலமைப்பின் 42 மற்றும் 43 ஆம் அத்தியாயத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள பொறுப்பின் அடிப்படையில் ஜனாதிபதி அமைச்சரவையைக் கூட்ட வேண்டும் என்று அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவிக்க தீர்மானித்திருந்தது. அரசியலமைப்பின் 42 ஆம் அத்தியாயத்தில் நிறைவேற்றதிகாரம் மற்றும் அமைச்சரவை தொடர்பில் ஜனாதிபதிக்கு உள்ள பொறுப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்திற்கேற்ப அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

அரசியலமைப்புக்கிணங்க தற்போது மக்களின் பாதுகாப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூற வேண்டும். நிறைவேற்றதிகாரத்தின் கீழ் அமைச்சரவையின் பொறுப்பு தொடர்பான 43 (1) அத்தியாயத்தில் இந்த விடயம் உள்ளடங்குகின்றது.

அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பு அமைச்சரவைக்குரியது. அதே போன்று நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு கூற வேண்டிய கடமையும் அமைச்சரவைக்கு உண்டு. ஜனாதிபதி, அமைச்சரவையின் உறுப்பினர், அமைச்சரவையின் பிரதானி என்று அரசியலமைப்பின் 42 (2) ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புக்கிணங்க அமைச்சரவையைக் கூட்டும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என்பதை அமைச்சரவை ஜனாதிபதிக்கு வலியுறுத்தவிருந்த நிலையில் , மீண்டும் அமைச்சரவையைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததால் அதற்கான அவசியம் இல்லாமல் போனதாக மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages