பிரதான செய்திகள்

முல்லைத்தீவில், தனியார் ஊடகங்களுக்கு தடை, அங்கு சர்ச்சைமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது .

குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் , பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ,மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களை பார்த்து ஆளுநர் சுரேன் இராகவன் தனியார் ஊடகங்கள் யார் என கேட்டு தனியார் ஊடகங்களை வெளியேறுமாறும் ,பின்னர் கூட்ட தீர்மானங்களை வழங்குவதாகவும் அரச ஊடகங்கள் மட்டும் இருக்குமாறும் கேட்டுகொண்டார் . இது அரச கூட்டம் அரச விடயங்கள் பற்றி மக்கள் பிரதிநிதிகளுடன் அரசு ஊழியர்கள் கலந்துரையாடும் விடயம் எனவும் ஊடகங்கள் இருக்கத்தேவையில்லை எனவும் தனியார் ஊடகங்களை வெளியேறுமாறு பணித்தார் .

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ” இதுவரை காலமும் ஊடகங்களின் முன்னிலையில்தான் இந்த கூட்டம் நடைபெற்றது .அந்த வழமையை மாற்றவேண்டாம் ,மற்றும் அரசாங்க ஊடகங்களை அனுமதித்து தனியார் ஊடகங்களை வெளியேறவேண்டும் என கூறுவது பொருத்தமல்ல ” என தெரிவித்தார் இதன்போது குறுக்கிட்ட ஆளுநர் அப்படியானால் அனைத்து ஊடகங்களையும் வெளியேற்றுவோம் என தெரிவித்தார் .

இடையில் குறுக்கிட்ட பாராளுமனர் உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ” ஊடகங்கள் அனுமதிக்கப்படவேண்டும் அவ்வாறு வெளியில் அனுப்ப முடியாது ,ஊடகங்களுக்கு பயப்படவேண்டிய தேவையில்லை இந்த அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நடைபெறும் விடயங்களை மக்கள் அறியவேண்டும் நாங்கள் என்ன பேசுகின்றோம் என்பதை மக்கள் அறியவேண்டும்” என தெரிவித்தார் .

இதன்போது மீண்டும் சிவசக்தி ஆனந்தன் எம் பி – ’19ஆவது திருத்த சட்டத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது .ஒவ்வொருவருக்கும் தகவல் அறியும் உரிமை இருக்கின்றது ” என தெரிவித்தார் .
இடையில் குறுக்கிட்ட ஆளுநர் சிவசக்தி ஆனந்தன் எம் பியிடம் ” ஆம் அவ்வாறு சட்டம் இருக்கின்றது உண்மை ஆனால் ஒவ்வொரு கூட்டத்தையும் ஒவ்வொரு பேச்சுவார்தையையும் அறிய வேண்டும் என இருக்கின்றதா ” என கேட்டார்.

அதற்கு பதிலளித்த சிவசக்தி ஆனந்தன் ” ஆம் கட்டாயம் அவ்வாறு அறியவேண்டும் இங்கே நடைபெறும் விடயங்களை இங்கே பேசப்படும் விடயங்களை இந்த மாவட்டத்தின் மக்கள் அறியவேண்டும் , அந்த மக்களுக்கு அது தெரியவேண்டும் , நாங்கள் இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை பற்றித்தான் பேசுகின்றோம் ,வேற ஒருவிடயங்களை பற்றியும் பேசவில்லை எனவே இந்த விடயங்களை மக்கள் அறியவேண்டும் ஆகவே ஊடகங்களை அனுமதியுங்கள் . இந்த அரசாங்கத்தில் வெளிப்படை தன்மை இருக்கவேண்டும் ,தகவல் அறியும் உரிமை எல்லோருக்கும் இருக்கின்றது . இந்த நிலையில் தனியார் ஊடகங்களை மட்டும் வெளியேற்றுவது தவறானது ” என தெரிவித்தார் .

இதனால் ஆத்திரமடைந்த ஆளுநர் ” நான் ஊடக எதிர்ப்பாளன் அல்ல இங்கே நடைபெறும் விடயங்களை நான் பார்வையிடுகின்றேன் நீங்கள் கூட்டத்தை நடாத்துங்கள். நான் ஊடகங்களுக்கு பேசவரவில்லை ” என தெரிவித்துவிட்டு அமர்ந்துகொண்டார் . இதனால் சிறிதுநேரம் அமளிதுமளி ஏற்பட்டது . தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களையடுத்து ஊடகங்கள் தமது பணியை மேற்கொள்ள இடமளிக்கப்பட்டது .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...


முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
News
News
[blogger]

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget