முன்னிலையாகுமாறு, பிரதமர் உட்பட பல அமைச்சர்களுக்கு அழைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்கும் பராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் முன்னாள் சட்டம், ஒழுங்கு அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக விசாரிக்கும் பராளுமன்ற தெரிவுக்குழு எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...