தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 15, 2019

சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர் : விமல் வீரவன்சமுஸ்லிம்களை சிங்களவர்கள் பெரிதும் நம்பியிருந்தார்கள். ஆனால், அது இன்று தலைகீழாக மாறியுள்ளது. உயிர் த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் குழுவினரின் செயற்பாட்டால் சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் துரோகிகளாக மாறியுள்ளனர்.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக் கையில்

“இந்த நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தை உடன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனில், எதிர்க்கட்சித் தலை வர் மஹிந்த ராஜபக்ச கூறியதுபோல் முஸ்லிம்கள் அனைவரினதும் வீடுகளும் மற்றும் பள்ளிவாசல்களும் சோத னைக்குட்படுத்தப்படுவது கட்டாயம்.

அத்துடன், சஹ்ரான் குழுவினரின் தாக்குதல்களுடன் தொடர்புபட்டனர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் உடன் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

அதேவேளை, குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை தூக்குத் தண்டனையாக இருக்க வேண்டும்" - என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

Post Top Ad

Your Ad Spot

Pages