நோன்புகாலத்தில் கைதிகள் என்ன செய்தனர்? அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதா?

21/4 தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் முஸ்லிம்கள் நோன்புக் காலத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு கையாளப்பட்டனர் என்பது விசாரணையுடன் தொடர்புடைய அதிகாரியொருவரிடம் கேட்டோம்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏராளமானவர்கள் அப்பாவிகள் எனவும், அவர்களுக்கும் தாக்குதல் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையென முதலில் குறிப்பிட்டார். நோன்பு காலத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவரகளின் கடமைகளை செய்ய அதிகாரிகள் இடமளித்ததாகவும் அவர் குறிப்பிடடார்.

அவர்கள் நோன்பு இருப்பதில் ஏதாவது சிக்கல் இருந்ததா? எனக் கேட்டோம்.
''ஏராளமானோர் ஒரு குறுகிய இடத்தில் இருப்பதால் சிக்கல்கள் இருந்திருக்கும். நோன்பு காலம் ஆரம்பித்தவுடன் சந்தேக நபர்களும் நோன்பு நோட்பதற்கு ஆரம்பித்தனர். என்ன செய்வது என்று யோசித்தோம். தடுப்பில் உள்ளவர்களுக்கு உணவு சமைப்பவருக்கு நோன்பு கஞ்சி வைக்கத் தெரியாது. நோன்பு கஞ்சி வைப்பது என்பதை ஒருவரை அழைத்து அவர் கற்றுக்கொண்டார். இரண்டு நாட்கள் பழகினார். மூன்றாம் நாளில் இருந்து பழகிவிட்டார். தொடர்ந்து அவர்களுக்கு நோன்பு கஞ்சி வழங்கினோம்.'' என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ரமழான் பண்டிகை அன்று என்ன நடந்தது எனக் கேட்டோம்.
'தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை குளித்து தயாராக இருக்குமாறு சொல்லியிருந்தோம். அவர்களும் தயாராக இருந்தனர். பகல் அனைவருக்கும் பிரியாணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வெளியே உள்ள ஒரு வர்த்தகர் இதற்கான உதவிகளைச் செய்திருந்தார். அன்று மௌவி ஒருவரும் அழைக்கப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிடம் பேச வைத்தோம். அநேகமானவர்கள் கண்ணீர் அழுதுவிட்டனர். அது அவர்களுக்கு நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.'' என்றார்.

இதுகுறித்து தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் மனநிலை எவ்வாறிருந்தது எனக் கேட்டோம்.
''அவர்கள் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. கைதுசெய்யப்பட்டவர்களில் தாக்குதலுடன் தொடர்புபட்ட ஒருவரும் இருக்கிறார். விசாரணையின் போது அவர் கன்னத்தில் தாக்கப்பட்டுள்ளார். அவருக்கு அந்தப் பக்கம் கேட்கும் திறன் இல்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ''மிகவும் வருதுகிறேன். நாங்கள் செய்யவிருந்த காரியத்திற்கு உயிருடன் விட்டுவைத்திருப்பதே மேல். காது தானே பரவில்லை. '' என்று சொன்னார் என அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.

21/4 தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்டவரகளில் ஏராளமானவர்கள் எவ்வித நேரடிக் குற்றச்சாட்டுக்களும் இன்றி கைதுசெய்யப்பட்ட அப்பாவிகள் என அந்த அதிகாரிகள் கூறியிருந்தார்.

நோன்புகாலத்தில் கைதிகள் என்ன செய்தனர்? அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதா? நோன்புகாலத்தில் கைதிகள் என்ன செய்தனர்? அவர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதா? Reviewed by NEWS on June 14, 2019 Rating: 5