கல்முனை- சாய்ந்தமருதுவில் அதிரடி சுற்றிவளைப்பு -ஒருவர் கைது

பொலிஸ் விஷேட அதிரடிபடையினர் கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் நேற்று சுற்றிவளைப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். 

நேற்று (23) மாலை 6.40 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது வருமான வரி செலுத்தாது இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிகரட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...