ஷாபிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை நிரூபித்து காட்டுங்கள் : ராஜித

வைத்தியர் சாபிக்கு எதிராகவுள்ளதாக கூறப்படும் குற்றச் சாட்டுக்களில் முடியுமானால், ஒன்றை நிரூபித்துக் காட்டுங்கள் எனவும், அவரின் கழுத்தைப் பிடித்து வெளியேற்றிக் காட்டுவேன் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

குற்றம்சாட்டப்பட்டுள்ள வைத்தியர் சாபிக்கு எதிராக முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்களா? என தனியார் தொலைக்காட்சி செய்திச் சேவையொன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி – பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.

வைத்தியர் சாபிக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்பவர்களுக்கு, அச்சுறுத்தல் விடுத்தவர்கள், வைத்தியசாலை பணிப்பாளர்களும், டீ.ஐ.ஜிக்கள் மற்றும் ரத்ன தேரர் ஆகியோர்களே ஆவார்கள். நாம் அவருக்கு எதிராகவோ, ஆதரவாகவோ ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டுள்ளேனா என்பதை முடிந்தால் நிரூபித்துக் காட்டுங்கள் எனவும் மேலும் கருத்துத் தெரிவித்தார். 
ஷாபிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை நிரூபித்து காட்டுங்கள் : ராஜித ஷாபிக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டை நிரூபித்து காட்டுங்கள் : ராஜித  Reviewed by NEWS on June 23, 2019 Rating: 5