தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 19, 2019

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசிய அஸ்கிரிய தேரருக்கு மங்கல சாட்டையடி!

பௌத்த தர்மங்களையும் உயரிய சிந்தனைகளையும் தீவிரவாதத்தினை நோக்கி திசை திருப்ப முயல்கின்றவர்களுக்கு எதிராக பௌத்தர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், மனிதர்களை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென எந்தவொரு பௌத்தர்களும் எண்ணமாட்டார்கள் எனவும் இன்று (புதின்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் நேற்று தெரிவித்திருந்தார்.

“முஸ்லிம்கள் சிங்கள மக்களை அழிக்க எடுத்த செயற்பாடுகள் இப்போது பகிரங்கத்துக்கு வந்துள்ளன.எனது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மருத்துவர் ஒருவர் லட்சக்கணக்கான எமது குழந்தைகளை இல்லாமலாக்கியுள்ளார். 

இப்படியான சிங்கள இனத்தை அழிக்க நினைக்கும் தேசத்துரோகிகளை கல்லால் அடித்து கொல்ல வேண்டுமென பலர் என்னிடம் கூறினர். அப்படி செய்யுங்கள் என நான் கூற மாட்டேன்.

ஆனால் செய்யப்பட வேண்டியது அது தான். நாட்டையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்களை மட்டும் மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்” என அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் குறித்த டுவிட்டர் பதிவிற்கு நுாற்றுக்காணக்கான ஆதரவுகள் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Your Ad Spot

Pages