தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jun 18, 2019

பாராளுமன்றில் விமலின், மூளையை பரிசோதிக்க வேண்டும் என்றார் ரிஷாத்ஊடகப்பிரிவு

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சர்ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (18) உரையாற்றிய அவர் சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினரிடம் இந்தவேண்டுகோளை விடுத்தார்.

அவர் மேலும் கூறியதாவது , 

எனது தாயின் சகோதரர் ஒருவரின் மகள்தான் தெமடகொட தற்கொலை குண்டுதாரி என்று பாராளுமன்றஉறுப்பினர் விமல் வீரவன்ச, நான் சபையில் இல்லாத வேளை தெரிவித்திருக்கின்றார்.

“எனது தாய்க்கு சகோதரர் இல்லை , இது போன்ற பொய்யான பிரசாரங்களை இந்த உயர் சபையிலையே விமல்வீரவன்ச தொடர்ச்சியாக கூறிவருகின்றார் . தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே, நான் உங்களுக்கு ஒன்றைகூற விரும்புகின்றேன். குண்டுகள் வெடித்த நாளிலிருந்து விமல் வீரவன்ச இவ்வாறான பொய்களை சொல்லிசொல்லி இனங்களுக்கிடையே குரோதத்தையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதில் முனைப்புடன் செயற்படுகின்றார் அவர் சொல்லுவது எல்லாம் அப்பட்டமான பொய்யாகும் . எனவே தான் அவர் எனக்கு எதிராகஎந்த விதமான முறைப்பாடுகளையும் பொலிஸில் இதுவரை செய்யவில்லை.

இந்த உயர் சபையின் சிறைப்புரிமையை பயன்படுத்தி இவர் மேற்கொள்ளும் இவ்வாறான பொய்பிரசாரங்களை ஊடகங்களும் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக கொண்டு செல்கின்றது . எனது அம்மாவுக்கு எந்தசகோதரரும் இல்லை எனவும் . இவ்வாறான சம்பவதுடன் எந்த தொடர்பும் இல்லை எனவும் நான்பொறுப்புடன் இங்கு கூற விரும்புகின்றேன். அது மாத்திரமின்றி இது தொடர்பிலான உண்மைகள் வெளிவரவேண்டும் எனவும் விரும்புகின்றேன்” . இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

Post Top Ad

Your Ad Spot

Pages