முஸ்லிம்களுக்கு ஆதரவாக, கொழும்பில் ஆர்ப்பாட்டம்! (வீடியோ)முஸ்லிம் உ‌ரிமைகளுக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில், 10 முக்கிய கோரிக்கைகளுடன், முஸ்லிம்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று காலை கொழும்பு புதுக்கடையில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாக நடைபெற்றது. 

 இன்றைய ஆர்பாட்டக்களத்தில் இருந்து அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் விசேட கோரிக்கைகளுடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.. 

இவ் ஆர்ப்பாட்டத்தின் போது, முஸ்லிம்களின் ஆடை கலாச்சாரம், டாக்டர் ஷாபி கைது, ரிஷாத் பதியுதீன் மீதான போலி குற்றச்சாட்டு, அரபு எழுத்து நீக்கம் தொடர்பான, மட்டக்களப்பு கெம்பஸ் தொடர்பான, இனவாத ஊடகங்களுக்கு எதிரான, சட்டவிரோத கல்முனை பிரதேச செயலக உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் அரசு இதனை கவனம் செலுத்த வேண்டும் எனக்கோரி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 


வீடியோ ...  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...