இன்று பொதுஜன பெரமுனவுடன் இணையவுள்ள 10 கட்சிகள்..!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் புதிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று(26) காலை 9.00 மணிக்கு கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் உள்ள, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத 10 அரசியல் கட்சிகள் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.

இதன்படி, மவ்பிம ஜனதா கட்சி, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, முஸ்லிம் உலமா கட்சி, லிபரல் கட்சி, நவ சிகல உறுமய, ஜனநாயக தேசிய கட்சி, ஐக்கிய இலங்கை மகா சபை, புமிபுத்ர கட்சி உட்பட அரசியல் கட்சிகள் பல ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளன.

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் 29 அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும், இவற்றில் 10 அரசியல் கட்சிகளுடன் நாளை முதல் கட்ட ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...