ஷரியா மூலம், காத்தான்குடியில் 20 பேர் கொலை : அபேதிஸ்ஸ தேரர்ஷரியா சட்டத்தின் படி காத்தான்குடி பிரதேசத்தில், இதுவரை 20 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

வஹாப் அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்போம் என்ற பெயரில் நேற்று விமல் வீரசன்ஸ் தலைமையில் நுகேகொடை  பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

வட்டிக்கு பணம் வழங்கியமை, அரசாங்கத்துக்கு தகவல் வழங்கியமை, பெண்கள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை, சூதாட்டத்தில் ஈடுபட்டமை, இஸ்லாம் மதத்தை விட்டு மதம் மாறுதல் மற்றும் இராணுவத்தில் இணைந்துக்கொண்டமை ஆகிய காரணங்களுக்காக அவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காரணங்களுக்காக காத்தான்குடி பிரதேசத்தில் ஷரியா சட்டத்திற்கு இணங்க 20 பேருக்கும் அதிகமானோருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து ஆதாரங்களும் தகவல்களும் தன்னிடம் உள்ளது.

ஆகவே தமக்கு எதிராக சவால் இருப்பதாக அனைவரும் ஒன்றிணைந்து, இதற்கெதிரான போராட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...