இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு 2,500 பேர் சவூதி சென்றுள்ளனர்

இலங்­கை­யி­லி­ருந்து நேற்­றைய தினம்­வரை 2,500 பேர் ஹஜ் கடமைக்காக சவூ­திக்கு பய­ண­மா­கி­யுள்­ளனர். அத்­துடன் இரண்டு அதி­கா­ரி­களும் இரண்டு வைத்­தி­யர்­களும் மக்கா சென்­றுள்­ள­தாக அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் பாஹிம் ஹாசிம் தெரி­வித்தார்.

இம்­முறை ஹஜ் பய­ணத்தில் சிக்­கல்கள் ஏற்­ப­டா­த ­வ­கையில் பல்­வேறு ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார். இது குறித்து மேலும் தெரி­வித்த ஹஜ் குழு உறுப்­பினர்,

இம்­முறை இலங்­கைக்கு 3500 ஹஜ் கோட்டா கிடைத்­தது. இதற்கு மேல­தி­க­மாக 500 கோட்டா இறுதி சந்­தர்ப்­பத்தில் கிடைக்­கப்­பெற்­றது. இறு­தி­யாகக் கிடைத்த கோட்­டாவை நாம் முக­வர்­க­ளுக்கு உரிய முறையில் பகிர்ந்­த­ளித்தோம்.

அதற்­கான ஏற்­பா­டு­க­ளுக்கு ஒரு­மா­த­கால அவகாசம் பெறப்­பட்­டது. மேல­திக கோட்­டாவில் ஹஜ் பயணம் மேற்­கொள்ள சந்­தர்ப்பம் கிடைத்­த­வர்­க­ளுக்­கான ஏற்­பா­டு­களும் பூர்த்­தி­யா­கி­விட்­டன. அத்­துடன், ஹஜ் பயண நட­வ­டிக்­கை­க­ளுக்­காக 7 அதி­கா­ரிகள் சவூ­திக்கு செல்­ல­வுள்­ளனர். மேலும் 5 வைத்­தி­யர்கள் கொண்ட குழு­வி­னரும் அங்கு செல்வர்.

இலங்­கையின் முதல் ஹஜ் குழு கடந்த திங்­கட்­கி­ழமை சவூதி அரே­பி­யாவை சென்­ற­டைந்­தது. அத்­துடன் நேற்­றை­ய­தினம் வரை 2500 பேர் ஹஜ் யாத்­தி­ரைக்­காக சவூ­திக்கு சென்­றுள்­ளனர். 26 ஆம் திகதி தொடர்கம் 30 ஆம் திக­திக்குள் 3200 பேர்­வரை மக்கா சென்­ற­டைவர் என்றும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை, சவூதி அர­சாங்கம் அறி­முகம் செய்­துள்ள ஈ-ஹஜ் சேவை மூலம் ஹஜ் பய­ணத்­துக்­கான விசாக்­களை விநி­யோ­கிப்­பது மிகவும் இல­கு­வாக இருந்­த­தாக இலங்­கையின் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.எம்.ஹலீம் அரப் நியுஸ் செய்தி நிறு­வ­னத்­திற்கு தெரி­வித்­துள்ளார்.

மேலும், மிகச்­சி­றப்­பான முறையில் 4,000 விசாக்­களை எங்­களால் விநி­யோ­கிக்க முடிந்­தது. அனைத்து விசாக்­களும் கால தாம­த­மின்றி சரி­யான நேரத்தில் வழங்­கப்­பட்­டன என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இம்­முறை யாத்­தி­ரி­கர்­களை ஏற்­றிச்­செல்­வ­தற்­கான விமானப் போக்குவரத்து சேவைகளை சவூதி அரேபியன் எயார்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் என்பன இணைந்து செயற்படுத்துகின்றன.

ஹஜ் யாத்திரைக்கான இறுதி விமானம் இலங்கையிலிருந்து ஆகஸ்ட் 7 ஆம் திகதி புறப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...