தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 10, 2019

3 வருட சேவையில் ஈடுபடும் ஆசியர்களின் பிள்ளைகள் அதே பாடசாலையில் கல்வி கற்கலாம்தான் கடமையாற்றும் தேசிய பாடசாலையில் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு மேல் சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களின் பிள்ளைகளை அதே பாடசாலையில் சேர்ந்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

பல்லாயிரக்கணக்கான மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களிள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளும் போது சிக்கல்கள் ஏற்படாமல் இருப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இதனூடாக சிறந்த மனநிலையில் ஆசிரியர்களுக்க கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் எனவும் தரமான சேவையினை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தேசிய பாடசாலைகளில் 1, 5, 6 மற்றும் 11 ஆம் தரங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக ஆசிரியர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages