அரசை 7 நாட்களுக்குள் வீழ்த்தினால் நான் அரசியலிருந்து ஓய்வு : ரதன தேரவுக்கு சாலி சவால்

வணக்கத்திற்குரிய அத்துரலியே ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசாங்கத்தை தோல்வியடைய செய்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். 

அவர் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக கொண்டுவரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ரத்ன தேரர் தலதா மாளிகை முன்னிலையில் உண்ணாவிரதத்தில் இருந்ததும் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஒரு சூழ்ச்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...