தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 3, 2019

ஞாயிறு வரை நோன்பு பிடிப்போம் :சிங்கள மாநாட்டை முறியடிப்போம் - ACJU கோரிக்கைஅஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

எதிர்வரும் 2019.07.07ம் திகதி கண்டியில் "சிவ்ஹெல மஹா சமுலுவ” எனும் தொனிப்பொருளில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அக் கூட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான உண்மையற்ற பல
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட இருப்பதாகவும் எமது உரிமைகளை பெறுமளவில் தடுப்பதற்கான முன்னெடுப்புக்களைச் செய்து கொண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது.

இவ்வாரான திட்டங்களை முறியடிப்பதற்கு அல்லாஹ்வின் உதவியைத் தவிர வேறு எதுவும் கிடையாது.

எனவே நாம் அனைவரும் அதிகமாக துஆ, இஸ்தி. ஃபார் போன்ற
அமல்களில் ஈடுபடுவதுடன் எமக்கு வரக் கூடிய சோதனைகளைத் தடுப்பதற்கு ஸதகாக்கள் கொடுக்குமாறும் எதிர்வரும் வியாழன் முதல் ஞாயிறு வரை ( 2019 ஜூலை மாதம் 04 - 07 ) அனைவரும் நோன்பு நோற்று எமது சமுதாயத்தின் பாதுகாப்பிற்காகவும் நாட்டில் சமாதானம் நிலவுவதற்காகவும் அல்லாஹ்விடம் அதிகம் பிரார்தனைகளில் ஈடுபடுமாறும் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.

மேலும் இந்த சூழ்நிலையை கருத்திற்கொண்டு 2019.07.07ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அத்தியவசிய தேவை இன்றி கண்டி நகருக்கு வருகை தருவதையும் கண்டி நகர் ஊடாக பிரயாணம் செல்வதையும் தவிர்க்குமாறு வேண்டுகின்றோம்.

வஸ்ஸலாம்.

அஷ்ஷெய்க் ஏ.எல், அப்துல் Gகப்fபார் (தீனி)
பொதுச் செயலாளர்,
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா,
கண்டி மாவட்ட கிளை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages