சுதந்திர கட்சியின் வேட்பாளராக நான் தயார் - குமார வெல்கம

NEWS
0 minute read
0
எதிர்வரும் ஜனதிபதி தேர்தலில் சுதந்திர கட்சியின் வேட்பாளராக போட்டியிட தான் தயாரென பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு தன் மீது விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக சுதந்திர கட்சியில் வாய்ப்பு வழங்கப்பட்டால் தன்னால் பாரியதொரு மக்கள் கூட்டத்தை உருவாக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளரானால் தான் ஒருபோதும் அவருக்கு ஆதரவளிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)