தலைப்புச் செய்தி

Post Top Ad

Your Ad Spot

Jul 6, 2019

மதுஷுடன் தொடர்பு: மஹிந்த அணி எம்..பி ஒருவர் கைதாவார்..
போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலகக் குழு உறுப்பினர் மாகந்துரே மதுஷ_டன் தொடர்பு பேணிய நாடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு தடவை போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் இந்த நாடாளுமன்ற உறுப்பினரை காவல்துறையினர் கைது செய்ய சென்ற போது ஹேலிகொப்டர் மூலம் சென்று மஹிந்த ராஜபக்ச அவரை காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

நாம் கூறியவை எதுவும் இதுவைரயில் பொய்யாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 

மதுஷ் தன்னுடன் தொடர்பு பேணிய ஏழு அரசியல்வாதிகள் பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages