கினிகத்தேனை தாழிறக்கத்தால் காணமல் போன ஜமால்டீன் ஜனாசாவாக மீட்பு

இயற்கையின் சீற்றத்தால் மலையகத்தில் நேற்று (18) முதல் ஏற்பட்டுள்ள வானிலை சீர்கேட்டினால், கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கினிகத்தேனை நகரில் இடம்பெற்ற தாழிறக்கம் காரணமாக 10 கடை தொகுதிகள் முற்றாக சரிந்து சேதமடைந்துள்ளன. 

இந்த நிலையில் அக்கடைகளில் ஏற்பட்ட சரிவில் சிக்குண்ட நிலையில் காணாமல் போயிருந்த ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இன்று (19) காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் ஈடுப்பட்டிருந்தனர். 

இந்த நிலையில் சரிவில் சிக்குண்டு இருந்த கினிகத்தேனை பகுதியை சேர்ந்த 64 வயதுடைய கே.எம். ஜமால்டீன் என்ற நபர் சடலமாக காலை 9 மணி அளவில் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...