”பொத்துவில் கல்வி வலயம்” இரத்து செய்யப்பட்டது!

கிழக்கு மாகாண ஆளுனர் முன்னாள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில், உஹன ஆகிய புதிய கல்வி வலயங்கள் ஏற்படுத்தப்படும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டுள்ளன.

குறித்த இரு அலுவலகங்களும் உப- கல்வி வலயங்களாக இயங்கும் எனவும் பொத்துவில், உஹன ஆகிய கல்வி வலயங்கள் இரத்துச் செய்யப்பட்டமையினால், வழங்கப்பட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனங்களும் இரத்துச் செய்யப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட உப வலயக் கல்வி பணிப்பாளர் நியமனமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் விரும்பினால் உப வலய பொறுப்பதிகாரிகளாகச் செய்யப்படலாம் எனவும் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ரோநியூஸ்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...