ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற ரத்ன தேரருக்கு அனுமதி மறுப்பு

வைத்தியர் சாபி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றை கையளிப்பதற்கு இன்று (23) ரத்ன தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்த குழுவுக்கு ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இன்று நண்பகல் இக்குழு ஜனாதிபதியை சந்திக்க வருகை தந்த போதிலும், ஜனாதிபதி செயலகத்திலுள்ள அதிகாரிகளிடமே தேரருக்கு இந்த மகஜரைக் கையளிக்க நேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற ரத்ன தேரருக்கு அனுமதி மறுப்பு ஜனாதிபதியை சந்திக்கச் சென்ற ரத்ன தேரருக்கு அனுமதி மறுப்பு Reviewed by NEWS on July 23, 2019 Rating: 5