சம்மாந்துறையில் மீட்கப்பட்ட பல வெடிபொருட்கள் சட்ட ரீதியானது : கடற்படை ஊடகப் பேச்சாளர்

NEWS
1 minute read
0
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள், வெலிசறை கடற்படை முகாமின் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியத்திலிருந்து சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி விநியோகிக்கப்பட்டவையா என பாதுகாப்பு தரப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்பு அமைச்சும் இது தொடர்பில் விசாரணைகளை நடத்துவதால் அந்த விடயம் தொடர்பில் மேலதிக விபரங்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது என கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இன்று (23) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைதானவர்களிடமிருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்களில், வெலிசறை முகாம் ஊடாக சட்ட ரீதியாக விநியோகிக்கப்பட்ட வெடிபொருட்கள் இருந்ததாக லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசிய லெப்டினன்ட், கொமாண்டர் இசுரு சூரிய பண்டார, வெலிசறை கடற்படை முகாமின் கீழ் உள்ள வெடிபொருள் களஞ்சியசாலை தொடர்பிலான விடயங்களையும் தெளிவுபடுத்தினார்.

சம்மாந்துறை மற்றும் நொச்சியாகம பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல்களில், அப்பகுதிகளிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன. அவற்றில் வெலிசறை ஊடாக விநியோகிக்கப்பட்ட சட்ட ரீதியிலான வெடிபொருட்கள் அடங்கியிருந்தன எனவும் சுட்டிக்காட்டினார்.
Tags

Post a Comment

0 Comments

Post a Comment (0)