ஷாபிக்கு சற்றுமுன் பிணை வழங்கப்பட்டது

Kurunegala magistrate granted bail for dr. Shafi Shahabdeen just now.


குருநாகல் மருத்துவர் ஷாபி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்துக்கிடமான முறையில் மருத்துவர் ஷாபி சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் இன்றைய தினம் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 
இதையடுத்து  வைத்தியர்  ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (25) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
இதேவேளை வைத்தியர் ஷாபியின் வழக்கு விசாரணைக்கு முன்னதாக குருணாகல் மக்களினால் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று (25) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. 


ஷாபிக்கு சற்றுமுன் பிணை வழங்கப்பட்டது ஷாபிக்கு சற்றுமுன் பிணை வழங்கப்பட்டது Reviewed by NEWS on July 25, 2019 Rating: 5