புர்கா வுக்கு முழுமையாக தடை: அமைச்சரவை பத்திரம் தயார்

பொது இடங்களில் புர்கா அணிதலை தடை செய்யும் வகையில் நீதியமைச்சர் தலதா அத்துகோறள நேற்றைய தினம் அமைச்சரவையில் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் விவாதிக்கப்படவுள்ளது. எனினும், இதனை நேற்றைய தினமே உடனடியாக நிறைவேற்றிக் கொள்ள முயற்சி இடம்பெற்றிருப்பதாக அறியமுடிகிறது.

குறித்த பத்திரத்தில் உள்ள விபரங்களை புரிந்து கொள்ள சற்று கால அவகாசம் தேவையென அமைச்சர் ரவுப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதற்கு மறுப்பு தெரிவித்த சில அமைச்சர்கள், நேற்றே உடனடியாக அதனை நிறைவேற்ற வேண்டும் என அழுத்தம் பிரயோகித்துள்ளனர். 

இந்நிலையிலேயே, ஈற்றில் ஒரு வார காலம் மாத்திரம் அவகாசம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புர்கா வுக்கு முழுமையாக தடை: அமைச்சரவை பத்திரம் தயார் புர்கா வுக்கு முழுமையாக தடை: அமைச்சரவை பத்திரம் தயார் Reviewed by NEWS on July 31, 2019 Rating: 5