ஷாபிக்கு ஆதரவாக CID என்று பிழையாக பிரச்சாரம் செய்யும் இனவாத தேரர்குருணாகல் வைத்தியர் ஷெய்கு சியாப்தின் மொஹமட் சாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடைப்பெற்று வருகின்ற விசாரணைகளில் குற்றப் புலனாய்வு பிரிவினர் அவருக்கு சாதகமாகவே நடந்துக் கொள்கின்றனர். என பாராளுமன்ற உறுப்பினர் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 

நீதித்துறையும் ஒத்துழைப்பதாக குற்றச்சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினதேரர் இன்று -23- செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியிடம் மகஜரொன்றை கையளிக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.

தன்னை சந்திப்பதற்கு ஜனாதிபதிக்கு நேரமில்லை என்று கூறியதாக , அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக ஊடகங்களுக்கு தெரிவித்த ரத்தின தேரர் மேலும் கூறியதாவது, 

மருத்துவர் ஷாபியை காப்பாற்றும் செயற்பாடுகளிலேயே குற்றப்புலனாய்வு பிரிவினரும் , நீதிமன்றமும் செயற்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் எமக்கான நியாயத்தைப் பெற்றுக் கொள்ள நாங்கள் நியமித்த ஜனாதிபதியை சந்திக்க சென்ற போது அவருக்கு எங்களுடன் சந்திக்க நேரமில்லையாம்.அப்படி என்ன வேலையை செய்கின்றார் என்று எமக்கு புரியவில்லை.

ஜனாதிபதிக்கு முதுகெலும்பு காணப்படுவதாக கூறுகிறார். ஆம் கதிரையில் அமர்ந்திருக்கின்ற அழகிளே அவருக்கு முதுகெலும்பு இருப்பது உறுதியாகிறதே. ஆனால் இந்த நாட்டு தாய்மார்களின் கஷ்டம் தொடர்பில் அவருக்கு எந்தவித கவலையும் இல்லை.

பாதிக்கப்பட்ட 900 தாய்மார்கள் மருத்துவருக்கு எதிராக முன்வைத்துள்ள முறைபாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் எமக்கு திருப்தியில்லை, ஆகவேதான் இந்த விசாரணைகளை முறையாக மேற்கொண்டு பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு நியயத்தை பெற்றுக் கொடுக்குமாறு குறிப்பிட்டு மகஜர் ஒன்றை கையளிக்க வந்தோம் , அவர் அதை பொறுப் பேற்காததால் ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக பிரிவின் பிரதானியிடம் அந்த மகஜரை கையளித்தோம்.எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...