ரணிலை சந்தித்த முஸ்லிம் எம்.பிக்கள்

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று (28) மாலை அலரிமாளிகையில் வைத்து சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது அடர்ந்தேறிய இனவாத வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டைப் பெற்றுக் கொடுப்பது இச்சந்திப்பின் நோக்கம் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தெரிவித்துள்ளார்.

இராஜினாமா செய்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை மீண்டும் ஏற்பது தொடர்பில்  இதுவரை இறுதித் தீர்மானம் ஒன்று எட்டப்படவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். 

ஆனால் விரைவில் பதவியேற்றக்கலாம்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...