சர்வத மத மாநாட்டில் சோபித தேரருக்கு தக்க பதில் கொடுத்த ரிஸ்வி முப்திகொழும்பில் உள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற உலக சமாதான இஸ்லாமிய மாநாட்டில், ஓமல்பே சோபித தேரரின் அல்குர்ஆன் மற்றும் இஸ்லாம் பற்றிய விமர்சனங்களுக்கு தக்கமுறையில் பதில்கொடுத்த ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்திக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதி, பௌத்த குருமார், சிங்கள அமைச்சர்கள் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், வெளிநாட்டு தூதுவர்கள் என பல தரப்பட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் ஓமல்பே சோபித்த தேரர் அழையா விருந்தாளியாக மேடையில் ஏறி இஸ்லாத்தையும், புனித குர்ஆனையும் விமர்சித்தபடி சென்றுள்ளார்.

அவரது உரை முடிந்ததும் றிஸ்வி முப்திக்கு உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இதன்போது சோபித்த தேரருடைய விமர்சனங்களுக்கு மிக நிதாமாகவும்,சபையோரை கவரும் வகையிலும் உரையாற்றியுள்ள நிஸ்வி முப்தி இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம்கூற தயாரெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் குறித்த நிகழ்வு முடிந்தபின் றிஸ்வி முப்தியை தொடர்புகொண்டுள்ள இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ள சில சிங்க மொழியிலான நூல்களும் ஓமல்பே சோபித்த தேரரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இஸ்லாம் பற்றியதும், குர்ஆன் குறித்த தவறான புரிதலை அவருக்கு தெளிபடுத்தவும் ஜம்மியத்துல் உலமா அவரிடம் ஓரு சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கி கேட்டுள்ளதாகவும் மேலும் அறிய வருகிறது.

அந்தவைகயில் வம்புக்கு இழுக்கும் நோக்குடன், சோபித்த தேரர் செயற்பட்டு உரையாற்றியிருந்தாலும் றிஸ்வி முப்தியின் பக்குவமான உரையும் அதன்பின்னர் தேரருக்கு வழங்கப்பட்ட விளக்கமும், முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது.

jafnamuslim 
சர்வத மத மாநாட்டில் சோபித தேரருக்கு தக்க பதில் கொடுத்த ரிஸ்வி முப்தி சர்வத மத மாநாட்டில் சோபித தேரருக்கு தக்க பதில் கொடுத்த ரிஸ்வி முப்தி Reviewed by NEWS on July 31, 2019 Rating: 5