இரவு : வெள்ளவத்தை அசாதாரண நிலையால் 6 பேர் வைத்தியசாலையில்கொழும்பு, வெள்ளவத்தை பள்ளிவாயலுக்கு அருகில் நேற்று இரவு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக காயமடைந்த ஆறு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மூன்று பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 6 பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரவு : வெள்ளவத்தை அசாதாரண நிலையால் 6 பேர் வைத்தியசாலையில் இரவு : வெள்ளவத்தை அசாதாரண நிலையால் 6 பேர் வைத்தியசாலையில் Reviewed by NEWS on August 05, 2019 Rating: 5