பதற்றத்தை உருவாக்கிய ஞானசாரவின் வழக்கு ஒத்திவைப்பு

இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை சின்னவெட்டி பிரதேசத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்பு பொலிஸ் பிரிவினர் வழக்கு தொடர்பாக சட்ட மா அதிபர் ஆலோசனை நாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனயைடுத்து வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் ஆறாம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...