கோத்தா. ஹக்கீம் : தொலைபேசியில் உரையாடல்

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது, கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சர் ஹக்கீம் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதாக கூறப்படுகிறது.

எனினும், இந்தப் பேச்சு தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது. ஐதேக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

கடைசியாக நடந்த மூன்று அதிபர் தேர்தல்களிலும் இந்தக் கட்சி ஐதேக தலைமையிலான கூட்டணி நிறுத்திய வேட்பாளரையே ஆதரித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அதுபோல் கடந்த சில தினங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுக்கு சஜித்தை வேட்பாளராக அறிவிக்குமாறு கோரியதாகவும் தெரிய வருகிறது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்