மாத்தறை முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவம் : 4 பொலிஸார் பணி நீக்கம்

மாத்தறை, கிரிந்த பகுதியில் கடந்த 26 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை தடுக்க தவறிய குற்றச்சாட்டில் நான்கு பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி இரவு இடம்பெற்ற குறித்த வன்முறைகள் ஏற்படுவதை தடுக்க தவறியமை, கடமைகளை சரிவர செய்யாமை, சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஹக்மன பொலிஸ் நிலையத்தின் 4 பொலிசார் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாத்தறை முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவம் : 4 பொலிஸார் பணி நீக்கம் மாத்தறை முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவம் : 4 பொலிஸார் பணி நீக்கம் Reviewed by NEWS on September 30, 2019 Rating: 5